பாஜக ஆட்சியில் இலவசமாய் தரப்பட்ட ஸ்பெக்ட்ரம்: நஷ்டம் ரூ. 1.6 லட்சம் கோடி

2 ஜி அலைவரிசை விற்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், நாட்டுக்கு ரூ. 60,000 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தான் சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்றும் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராஜா,
பாஜக ஆட்சியில் 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு ஸ்பெக்டரத்தை இலவசமாகவே வழங்கினார்கள். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 1.6 லட்சம் கோடி. காசே வாங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை தந்தார்கள்?.
பாஜக ஆட்சியில் நடந்த இந்த 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தான் இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மகா பெரிய ஊழல்.
நாங்கள் மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் சொன்ன விதிப்படி தான் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டோம். எந்த விதிமுறையையும் நாங்கள் மீறவில்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார். இதனால் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.
இதே அருண் ஜேட்லி தான் பாஜக ஆட்சியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக பரிந்து பேசியவர். ஒரு செல்போன் நிறுவனத்துக்காக உயர் நீதிமன்றத்திலேயே வாதாடியவர். இப்போது அரசியலுக்காக இல்லாத ஒன்றைக் கூறுகிறார்.
இப்போது அருண் ஜேட்லிக்குள்ளேயே சண்டை நடந்து கொண்டுள்ளது. அவரது அரசியல் மூளையும் அவருக்குள் உள்ள வக்கீல மூளையும் மோதிக் கொண்டுள்ளன. இதில் எந்த மூளை வெல்லுமோ தெரியாது என்றார்.
-
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications