திருமணத்தில் முடிந்த ராங் நம்பர் காதல்!
கள்ளக்குறிச்சி: செல்போனில் ஏற்பட்ட ராங் நம்பர் காரணமாக இளம் பெண்ணிற்கும், வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் வசிப்பவர் முத்து. இவரது மகன் ராமமூர்த்தி. இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது செல்மூலம் தனது உறவினருக்கு பேச முயன்றபோது, அது தவறுதலாக கள்ளக்குறிச்சி அடுத்த அலம்பளம் கதிர்வேல் என்பவரின் மகள் அபிராமியின் செல்லுக்கு இணைப்பு கிடைத்து பேசினார்.
இந்த திடீர் பேச்சு, தொடர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் நேரில் பார்க்காமலே காதல் கோட்டை பணியில் தங்களது காதலை செல்போன் மூலம் வளர்த்து வந்தனர்.
தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த ராமமூர்த்தியும், அபிராமி கள்ளக்குறிச்சியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் சந்தித்தனர்.
இந் நிலையில், அபிராமியின் தந்தை இறந்துவிடவே அவரது காதல் விவகாரம் உறவினர்களுக்குத் தெரியவந்தது.
காதலி்ன் தீவிரத்தை உணராத அவர்கள் ராமமூர்த்தியை சந்தேகப்பட்டனர். அபிராமியை அவர் ஏமாற்றுவதாக நினைத்தனர்.
இந் நிலையில் ராமமூர்த்தி நேற்று மாலை கள்ளக்குறிச்சிக்கு வந்தபோது, அவரை சுற்றி வளைத்த அபிராமியின் உறவினர்கள், மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விஷயம் தெரிந்து ஓடி வந்த அபிராமி தங்களின் காதலை போலீசாரிடம் எடுத்துக் கூறவே காவல் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் போலீசார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications