ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் வீட்டில் வருமான வரி ரெய்ட்

2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த இவரும் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 3 பேரும் ரூ. 4,000 கோடி அளவுக்கு அரசுப் பணத்தை சுருட்டியுள்ளதாகவும், லைபீரியா உள்ளிட்ட பல நாடுகளில் சுரங்கங்கள் வாங்கியுள்ளதாகவும்,
சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய் உள்ளிட பல நாடுகளில் சிமெண்ட், ஆட்டோமொபைல், ஹோட்டல்கள், இரும்பு தொழிற்சாலைகளில் இவர்கள் பல்லாயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாகவும் சமீபத்தில் அமலாக்கப் பிரிவு வழக்குத் தொடர்ந்தது.
இதைத் தொடர்ந்து இன்று வருமான வரித்துறையின் சோதனை நடந்துள்ளது. ராஞ்சி, சய்பசா ஆகிய இடங்களில் உள்ள கோடாவின் வீடுகள், அவரது உறவினர்களின் வீடுகள், 3 முன்னாள் அமைச்சர்களி்ன வீடுகள், அலுவலகங்கள் என 65 இடங்களில் இந்த ரெய்ட் நடந்தது.
38 வயதான கோடா ஆர்எஸ்எஸ் இயகத்தி்ல் தனது அரசியல் வாழ்வைத் துவக்கியவர். 2000ம் ஆண்டில் பாஜக சார்பில் தேர்தலில் வென்று அமைச்சரானார்.
2005ம் ஆண்டில் சுயேச்சையாக வென்று பாஜக ஆட்சிக்கு ஆதரவு வழங்கி மீண்டும் அமைச்சரானார்.
2006ம் ஆண்டில் 3 அமைச்சர்களுடன் இணைந்து பாஜக ஆட்சியை கவிழ்த்தவிட்டு காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவுடன் இவரே முதல்வரானார்.
கடந்த ஆண்டு சிபு சோரனை முதல்வராக்க இவரை காங்கிரஸ் பதவி விலக வைத்தது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற கோடா இப்போதும் மத்திய அரசை ஆதரித்து வருகிறார்.
இந் நிலையில் ஜார்க்கண்டில் சோரன் ஆட்சியும் கவிழ்ந்துவிட்டதால் அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்தத் தேர்தலில் லாலு பிரசாத்-பாஸ்வான் ஆகியோருடன் கூட்டணி வைக்க பேச்ச நடத்தி வந்தார் கோடா. இந் நிலையில் தான் வருமான வரி ரெய்டில் சிக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications