மராத்தி.. ராஜ் தாக்கரே வழியில் சிவசேனா!
மும்பை: ராஜ் தாக்கரேவால் பெரும் அடி வாங்கியுள்ள நிலையில் ராஜ் தாக்கரே வழியில் செல்ல முடிவெடுத்து விட்டது சிவசேனா. மும்பையில் அனைத்து கடைப் பெயர்கள், விளம்பரப் பலகைகளில் மராத்தி மொழியே பிரதானமாக இருக்க வேண்டும் என சிவசேனா கையில் உள்ள மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த மும்பை மாநகராட்சியின் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தலைமை ஆய்வாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் மராத்தி மொழியே பிரதானமாக இருக்க வேண்டும்.
மராத்தியில் இடம் பெயரும் பெயருக்குப் பின்னர்தான் பிற மொழிகளில் பெயர்களை இடம் பெற வைக்கலாம்.
இந்த உத்தரவை 60 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இதை செய்யத் தவறுவோருக்கு அதிகபட்சம் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தற்போதும் மும்பையில் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மராத்தியில்தான் பெயர்கள் உள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் பெரிதாக போட்டு விட்டு தம்மாத்தூண்டு சைஸில் மராத்தி பெயர்களை போட்டு வைத்துள்ளனர்.
இப்படித்தான் முன்பு மராத்தியில்தான் பெயர்கள் இடம் பெற வேண்டும் என ராஜ் தாக்கரேவின் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போது ராஜ் தாக்கரே வழியில் சிவசேனாவும் களம் இறங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications