ராசியில்லாத அறநிலையத்துறை - ஜோதிடர்கள் அறிவுரைப்படி உதறினார் எதியூரப்பா

ரெட்டி சகோதரர்கள் தலைமையில், எதியூரப்பா எதிர்ப்பாளர்கள் அணி திரண்டுளளனர். இதனால் எதியூரப்பாவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன் வசம் இருந்து வந்த அறநிலையத்துறையை உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவிடம் ஒப்படைத்துள்ளார் முதல்வர் எதியூரப்பா.
இதுதொடர்பாக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை முதல்வர் வசம் இருந்து வந்த இந்து அறநிலையத்துறை, உள்துறை அமைசசர் ஆச்சார்யாவிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர்களின் ஆலோசனையின்பேரில்தான் அறநிலையத்துறை பொறுப்பை அவர் உதறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு இத்துறையை கிருஷ்ணய்யா ஷெட்டி வைத்திருந்தார். அப்போது வீட்டு வசதி வாரிய நிலத்தை வாங்கியது தொடர்பாக பெரும் முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சையில் சிக்கி அவர் பதவி விலகினார்.
இதைச் சுட்டிக் காட்டி அறநிலையத்துறையை கைவிட்டு விடுமாறு ஜோதிடர்கள் எதியூரப்பாவை வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால்தான் அந்தத் துறையை ஆச்சார்யாவிடம் எதியூரப்பா தள்ளி விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தன்னைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகள் விலகி, பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் எதியூரப்பா.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்ற அவர், குக்கே சுப்ரமணியம் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.
அத்வானியுடன் எதியூரப்பா தூதர்கள் சந்திப்பு
இதற்கிடையே, கட்சிக்குள் வெடித்துள்ள பூகம்பத்திலிருந்து தப்பி ஆட்சி கவிழாமல் காப்பதற்காக முதல்வர் எதியூரப்பா ஆதரவு தலைவர்கள், கட்சி மூத்த தலைவர் அத்வானியை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இன்று காலை டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை, எதியூரப்பா ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. தனஞ்செய் குமார், கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா ஆகியோர் சந்தித்து கர்நாடக நெருக்கடி குறித்து விவாதித்தனர்.
எதியூரப்பாதான் இவர்களை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பாவை மாற்றக் கூடாது என்று இவர்கள் அத்வானியிடம் வலியுறுத்திக் கூறினர்.
நேற்று பாஜக பொதுச் செயலாளர் ராம் லாலையும் இவர்கள் சந்தித்துப் பேசினர்.
இதற்கிடையே, கர்நாடக சபாநாயகரும், ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமானவருமான ஜெகதீஷ் ஷெட்டார், அருண் ஜேட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications