சரியான பாதையில் அமெரிக்கப் பொருளாதாரம்! - ஒபாமா

Subscribe to Oneindia Tamil

US economy moves in right direction
வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மெல்ல மீட்சிக்குத் திரும்புவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் அமெரிக்கா. இங்கு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வங்கித்துறையே பெருமளவு தோற்றுவிட்ட நிலை.

இதனால் உலகின் பல நாடுகள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின. மூன்று ஆண்டுகள் வரை நீடித்த இந்த கொடுமையான வீழ்ச்சியால் பல லட்சம் மக்கள் வேலை இழந்தனர்.

ஆனால் இப்போதுதான் இந்த நிலையில் லேசான மாறுதல்கள் தோன்றத் துவங்கியுள்ளன. அதே நேரம் வேலை வாய்ப்பு நிலை மற்றும் வங்கித் துறையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.

அதிபர் ஒபாமாவின் நிதிச் சலுகைகள் காரணமாக மூன்றாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து எழுந்து 3.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், "நான் பதவி ஏற்றபோது மிக மோசமான நிலையிலிருந்தது பொருளாதாரம். இப்போது வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரியத் துவங்கிவிட்டன. எனது தலைமையிலான அரசு சரியான திசையில்தான் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இன்னும் நிறைய சோதனைகள் பாக்கியுள்ளன என்பது தெரியும். இன்னும் வேலைச் சந்தையை சீரமைக்க வேண்டிய பெரும் பணி உள்ளது. அதன் ஒரு பகுதியாக 650000 வேலை வாய்ப்புகளை காப்பாற்றியுள்ளோம். வேலை இழப்பைத் தடுப்பதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தப் போகிறோம்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+