அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு தபால்தலை
சென்னை: அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் மருத்துவ சேவையை கெளவுரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு தபால்தலை தொகுப்பை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ.ராசா வெளியிட, முதல் பிரதியை துணை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியி்ல் இந்திய அஞ்சல்துறை தலைவர் பி.மூர்த்தி, அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் ஸ்டாலின் பேசுகையில்,
மருத்துவத் துறையில் அயராத உழைப்பு, மனித குலத்திற்கு மகத்தான மருத்துவ சேவை, தொலைநோக்கு பார்வை ஆகியவற்றுக்கு கிடைத்திருக்கிற அங்கீகாரம்தான் இந்த சிறப்பு தபால் தலை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை இன்று ஓர் ஆலமரம் போல் விரிந்து பரந்து உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது.
54 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகிறார்கள். மகத்தான சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு தபால்தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. தபால் தலை வெளியிடப்படும் முதல் மருத்துவமனை அப்பல்லோதான் என்றார்.
அமைச்சர் ராசா பேசுகையில்,
மந்திரி ராசா, அப்பல்லோ மருத்துவமனைக்கு நினைவு தபால் தபால் வெளியிடுகிறாரே, அவருக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ? என்று பத்திரிகைகள் எழுதினால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தபால்தலை வெளியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் அப்பல்லோ மருத்துவமனை பெற்றுள்ளது என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications