சிக்னல் தவறால் பாதை மாறிப் போன மின் ரயில்!
சென்னை: தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டதால் மின்சார ரயில் பாதை மாறிப் போனது. இதனால் ரயில் கடத்தப்படுகிறதோ என்று பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
அரக்கோணத்தில் இருந்து நேற்று மதியம் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இது வியாசர்பாடி ரயில் நிலையத்தை விட்டு கடக்கும் போது, அங்கிருந்த ஊழியர்கள் தவறால் சிக்னல் மாற்றி கொடுக்கப்பட்டு விட்டது.
அதைத் தொடர்ந்து அந்த மின்சார ரயில் பீச் ரயில் நிலையம் செல்லும் பாதையில் சென்றது. இதனால், பயணிகள் பதறினார்கள். சில மாதங்களுக்கு முன்பு சென்டிரல் ரயில் நிலையத்தி்ல மின்சார ரயிலை ஒரு மர்ம நபர் கடத்திச் சென்று மோதிய சம்பவம் ஞாபகத்திற்கு வர பயணிகள் பெரும் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் ரயில் என்ஜினின் டிரைவருக்கு சந்தேகம் வந்து அவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ராயபுரம் வழியாக ரயிலை திருப்பி விட்டு பேசின்பிரிட்ஜ் வழியாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்து சேர்ந்தது.
இந்தக் குழப்பத்தால் மின்சார ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications