புலிகளுக்கு ஆயுத சப்ளை: சிங்கப்பூர் அரசியல் தலைவர் பால்ராஜ் நாயுடு கைது

சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் நாயுடு. கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரை சிங்கப்பூர் போலீஸார் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்ததாக கூறி கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் தனது வீட்டில்வைத்து நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 29ம் தேதி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நாயுடு மீது அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளுக்காக அவர் தேடப்பட்டு வருகிறார். எனவே நாயுடுவை அமெரிக்க போலீஸார் விசாரணைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
அவரை அமெரிக்காவுக்கு அனுப்பும் கோரிக்கை தொடர்பான மனு நாளை சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
நாயுடு மீது அமெரிக்காவில் உள்ள வழக்கு..
சீர்திருத்தக் கட்சியை நிறுவியர்களில் ஒருவர் நாயுடு. இவரும், இன்னொரு சிங்கப்பூர் வாசியான ஹனீபா உஸ்மான் என்பவரும் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை சப்ளை செய்துள்ளதே குற்றச்சாட்டாகும்.
இந்த வழக்கில் ஏற்கனவே உஸ்மான் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
57 வயதாகும் உஸ்மான், ஒரு ஆண்டுக்கு முன்பு பால்டிமோர் கோர்ட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 37 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.
கட்நத 2006ம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை புலிகளுக்கும், ஆயுத வியாபாரிகளுக்கும் இடையே புரோக்கராக செயல்பட்டுள்ளார் நாயுடு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது நாயுடுவை அமெரிக்காவுக்கு விசாரணைக்காக சிங்கப்பூர் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அங்கு விசாரணையை சட்டப்பூர்வமாக தனது கட்சிக்காரர் சந்திப்பார் என்று நாயுடுவின் வழக்கறிஞரான ஜோனதன் டேன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பால்ராஜ் நாயுடு தீவிரவாதி அல்ல. இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு கட்சி துணை நிற்கும் என்று சீர்திருத்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications