அரசு கேபிள் டிவி வாரியம்- விரைவில் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
சென்னை: தமிழக அரசின் கேபிள் டிவி நல வாரியத்திற்கு விரைவில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில்,
கேபிள் டிவி தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு நல வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இவ்வாரியத்தின் முக்கிய கூட்டம், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பூங்கோதை தலைமையில், அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டு தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கம்பிவட தொலைக்காட்சி தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் கம்பி வட தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கு அரசு செயல்படுத்த இருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விவாதிக்கப்பட்டன.
இந் நெறிமுறைகளை பின்பற்றி உறுப்பினர் சேர்க்கைக்கான படிவமும், பிற படிவங்களும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளன. உறுப்பினராக சேர்க்கப்படும் நபர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இதன் பின்னர் உறுப்பினர்கள் கோரும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 30 ஆயிரம் நபர்கள் பயன்பெறுவார்கள். இந்த நலத்திட்டங்களுக்காக முதல்வர் கருணாநிதி ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இத்தொழிலாளர்கள் அனைவரும் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications