கள்ளதுப்பாக்கி விவகாரம்: போலீசுக்கு பயந்து ஆதிவாசிகள் காட்டுக்குள் ஓட்டம்
புளியங்குடி: வாசுதேவநல்லூர் தலையணை பகுதியில் கள்ளத் துப்பாக்கி விவகாரத்தில் போலீசாரின் கெடிபிடியால் ஆதிவாசிகள் காட்டு பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக விகேபுரம், புன்னையாபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் 3 பழங்குடியின இளைஞர்கள் உள்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 7 கள்ள துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் புளியங்குடி வனசரகத்திற்கு உட்பட்ட கோட்டை மலையாறு சேழிம்புதோப்பு பகுதியை சேர்ந்த செல்லையா மகன்கள் தினகரன், காபிரியேல், மற்றும் வாசுதேவநல்லூர் தலையணை பகுதியை சேர்ந்த ரவிதாமஸ் ஆகியோர் பழங்குடியித்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி. சிவகிரி வனசரக்கதிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குளை கள்ள துப்பாக்கி மூலம் சிலர் வேட்டையாடி வருவதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இவர்களை போலீஸ் தேடி வரும் நிலையில் வாசுதேவநல்லூர் தலையணை பழங்குடியின மக்கள் வசிப்பிடத்திலும் போலீசர் கெடுபிடி செய்வதால் 30க்கும் மேற்பட்ட ஆதிவாசி ஆண்கள், பெண்கள், முதியவர்கள் காட்டுக்குள் தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் கடந்த 3 தினங்களாக காட்டுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள், குழந்தைகள் உணவின்றி பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தின் தென்மாவட்ட தலைவர் பாண்டியன் கூறுகையி்ல், போலீசார் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பீதியை கிளப்பியதால் தலையணை ஆதிவாசி இனத்தை சேர்நதவர்கள் காட்டில் தஞ்சமடைந்துள்ளனர். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க பழங்குடியின மக்கள் போலீசாருக்கு ஓத்துழைப்பு அளிப்பார்கள்.
எனவே எவ்விதத்திலும் போலீசார் துன்புறுத்தாமல் மீண்டும் தங்கள் வசிப்பிடத்தில் அச்சமின்றி வாழ்ந்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications