மழை- அதிகாரிகளுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை
சென்னை: மழை, வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி 2வது நாளாக இன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கைத் தடுப்பது, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
ஆறு, குளம், ஏரிகள் உடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், வெள்ளத்தடுப்பு பணியில் விழிப்புடன் இருக்குமாறும் அரசு அதிகாரிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் , தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வெள்ளத் தடுப்பு நடவடிக்கை களை முடுக்கி விடுமாறும், ஆறுகள், ஏரிகள், குளங்கள் உடைந்து விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மீண்டும் ஆலோசனை ...
இந்த நிலையில் இன்று மீண்டும் முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இதில் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, மாநகர மேயர் மா.சுப்ரமணியம், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி, மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சென்னை நகர சாலைகள், தெருக்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அப்போது முதல்வர் கேட்டுக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications