தொடர் மழையால் அவதி - ரயில்கள், விமானங்கள் தாமதம்
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னைக்கு வந்த தென் மாவட்ட ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தன. அதேபோல விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெய்த கன மழையால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து சேர்ந்தன.
தண்டவாளங்களில் அதிக நீர் தேங்கி நின்றது, சிக்னல் பிரச்சினை, மெதுவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டது என இதற்குக் காரணம் கூறப்பட்டது.
அனந்தபுரி, முத்து நகர், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை உள்பட அனைத்து ரெயில்களும் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
காலை 6.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டிய கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.30 மணிக்கு எழும்பூரை வந்து சேர்ந்தது.
20 விமானங்கள் தாமதம்...
இதேபோல, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கி நின்றதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணி நடப்பதாலும் விமான நிலையத்தில் தேங்கிய நீர் வெளியேற முடியவில்லை.
இதனால் மதுரை, திருவனந்தபுரம், மும்பை போன்ற நகரங்களுக்கான உள்நாட்டு சேவைகள் சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications