மீண்டும் முழு வீச்சில் களமிறங்கும் அகாய்!

1929ம் ஆண்டு ஜப்பானில் அறிமுகமாகி மார்கெட்டில் புதிய புரட்சியையே உண்டாக்கியது அகாய் பிராண்ட்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை டிவி, சிடி பிளேயர், 5.1 மியூசிக் சிஸ்டம், வாஷிங் மெஷின் என பல உபகரணங்களை குறைந்த விலையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம்.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்ற கான்செப்டை வெற்றிகரமாக தங்களின் இந்திய முகவர் பேரோன் எலெக்ட்ரானிக்ஸ் மூலம் செயல்படுத்திய நிறுவனம் அகாய்தான்.
உச்சாணிக் கொம்பில் நின்ற வண்ணத் தொலைக்காட்சிகளின் விலையை சில ஆயிரங்களில் சாத்தியமாக்கிய அகாய் மற்றும் அய்வா நிறுவனங்களே. 21 அங்குல வண்ணத் தொலைக்காட்சியை ரூ.10000க்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிறுவனங்கள் தந்தன. மற்ற நிறுவனங்கள் அன்றைக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தன.
இதனால் 1998-99-ல் அகாயின் இந்திய மார்க்கெட் ஷேர் மட்டும் 16 முதல் 18 சதவீதமாக இருந்தது.
ஆனால் 1999-ல் வீடியோகான் நிறுவனம் அகாய் பொருட்களின் விற்பனை உரிமத்தை வாங்கியது. அதன்பிறகு ஷோரூம்களிலிருந்து மெல்ல மெல்ல காணாமல் போனது அகாய்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த விற்பனை உரிமம் வீடியோகானிடமிருந்து மீண்டும் அகாய் நிறுவனத்துக்கே திரும்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து மேலும் பல புதிய எலெக்ட்ரானிக் தயாரிப்புகளுடன் களமிறங்குகிறது அகாய். இத்தகவலை அகாய் நிறுவனத்தின் விற்பனை உரிமையைப் பெற்றுள்ள குளோபல் பிராண்ட்ஸ் எண்டர்பிரைசிங் சொல்யூஷன் நிறுவனத்தின் பிரனாய் தபாய் தெரிவித்துள்ளார். இவர்தான் இந்தியாவில் ஹேர் (Heir) பிராண்டை அறிமுகப்படுத்தியவர்.
இந்த முறையும் விலையில் புரட்சி, தரத்தில் யாரும் குறை சொல்ல முடியாத தொழில் நுட்பத்துடன் களமிறங்குவதாக தபாய் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications