ஏர் இந்தியா: நிர்வாகிகளின் ஓசிப் பயணம், ஊக்கத் தொகை 'வெட்டு'!
டெல்லி: இனி ஏர் இந்தியா தலைமை நிர்வாகப் பொறுப்புகளுக்கு வர நிச்சயம் எல்லோருமே யோசிப்பார்கள். அந்த அளவு சலுகைகளைக் கட் பண்ணப் போகிறதாம் ஏர் இந்தியா நிர்வாகம்.
சேர்மன், நிர்வாக இயக்குநர் போன்ற உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் இலவச விமான பயணங்கள், வெட்டியாகத் தரப்படும் ஊக்கத் தொகைகளை அடியோடு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா தலைவராக பதவி வகிப்போருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் (எத்தனை பேர் இருந்தாலும்!) ஆயுள்காலம் முழுக்க இலவசப் பயணத்தை அளிக்கிறது ஏர் இந்தியா. தலைமை நிர்வாகியாக வருவோருக்கும் இந்தச் சலுகைகள் உண்டு. இவர்களின் மகள், மருமகன், பேரன், பேத்திகள் என எல்லோருக்கும் இந்த சலுகை உண்டு.
இந்தச் சலுகை, வகிக்கும் பதவிக்கேற்ப அதிகாரிகளுக்கு தாராளமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவே பல கோடிகளை விழுங்குகிறது.
இதுதவிர, ஊக்கத்தொகை எனும் பெயரில் சம்பளத்துக்கும் அதிகமாகவே இந்த அதிகாரிகளுக்கு தரப்படுகி்றதாம். இதில்தான் முதலில் கை வைக்க வேண்டும் விமானப் போக்குவரத்து அமைச்சகமும் கூறியுள்ளதாம்.
ஏர் இந்தியாவில் பணியில் உள்ள 30 இயக்குநர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக மட்டுமே ரூ 65000 முதல் 85 ஆயிரம் வரை தருகிறார்களாம்.
இப்படி இன்னும் பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்களாம் நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள். இவற்றைக் குறைத்தாலே கணிசமான சம்பள சுமை குறையும் என்கிறார்கள் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தினர்.
இப்போது உள்ள நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி, இந்த சம்பள முறைகேடுகள், அனாவசிய சலுகைகளை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் விமானப் போக்குவரத்துத் துறை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications