தமிழக-கேரள எல்லையில் தொடர் மழை- 400 குடும்பங்கள் தத்தளிப்பு
தென்மலை: தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் சாலை வசதி துண்டிக்கப்பட்டு 400 குடும்பங்கள் தவித்து வருகின்றன.
தமிழக-கேரள எல்லை செங்கோட்டை அருகேயுள்ள ஆரியங்காவு, ரோஸ்மலை, தென்மலை, கழுதுருட்டி, முருகன்பாஞ்சால், அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இப்பகுதிகளில் ரப்பர், தேயிலை, தோட்டங்கள் உள்ளன. இங்கு தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இப்பகுதியில் வசிப்பவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் பொருட்கள் வாங்க ஊருக்குள் வரமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆரியங்காவு ரோஸ்மலை, இடப்பாளையம், கரும்பின் தோட்டம், கரையாளர்பத்து உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தினால் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் ஆரியங்காவிலிருந்து ரோஸ்மலை 5 கிமீ தொலைவில் உள்ளது. மிகவும் ஆபத்தான இப்பாதையில் சுமார் 7 கிமீ சாலை முற்றிலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. நேற்று அப்பகுதியில் 15 செமீ மழை பெய்துள்ளது.
இம்மழையினால் 7 கிமீ சாலைகள் துண்டிக்கப்பட்டு 400 குடும்பங்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 10 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
400 குடும்பத்தினர் ரோஸ் மலை பகுதியில் பாதை இல்லாத வனப்பகுதியில் சிக்கியுள்ளது குறித்து தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உணவு வழங்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட சேதம் போல் இம்முறையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதிகரித்து வரும் கட்டாற்று வெள்ளத்தால் தென்மலை நீர்த்தேக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மலை கடையாற்றில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையோரத்தில் இருக்கும் மக்கள் வேறு இடங்களில் குடியிருக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications