காவல் நிலையத்தில் வழக்கு பைல்கள் மாயம்: 15 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்குகள் சம்பந்தப்பட்ட 67 பைல்களைக் காணவில்லை. இது தொடர்பாக 3 இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்ஐகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்தில் பல்வேறு கால கட்டங்களில் பதிவாகியுள்ள சுமார் 67 வழக்குகளின் பைல்கள் திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அந்த கால கட்டங்களில் அங்கு பணிபுரிந்த மூன்று இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 எஸ்ஐகள் மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதில், இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேந்தன், செல்லமுத்து, சேகர், எஸ்.ஐ.,க்கள் சுந்தரராஜன், ஆறுமுகம், முருகேசன், பன்னீர்செல்வம், தங்கராஜ், பெரியசாமி, ஆனந்தகுமார், சிவகுமார், ஸ்ரீதரன், விஜயா, நாகமணி, நடராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவல் மற்ற காவல் நிலைய அதிகாரிகளுக்கும் பரவியதால் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த காவல் நிலையத்தில் தான் நில அபகரிப்பு மோசடி புகழ் என்.கே.கே.பி,.ராஜா சம்பந்தப்பட்ட வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications