பிளஸ்டூ தனித் தேர்வு-நவ. 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிளஸ்டூ தனித் தேர்வுக்கு வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசின் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களில் மட்டும் தேர்வு எழுத, 'எச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத 'எச்பி' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், புதுச்சேரி இணை இயக்குனர் அலுவலகம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், சென்னை மாவட்ட தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெறலாம்.
விண்ணப்பங்களை 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications