திருமூர்த்திமலை-வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 லிங்கங்கள்
உடுமலை: உடுமலை அருகே பெய்த கன மழையால் திருமூர்த்திமலை கோவிலுக்கு அருகே உள்ள அருவியின் அருகே வைக்கப்பட்டிருந்த 3 லிங்கங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் விநாயகர் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளன.
திருமூர்த்திமலை பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் பாலாற்றின் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது.
இதில் திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர் கோவில் ஆகிய கோவில்களை வெள்ளம் சூழ்ந்தது.
1975ம் ஆண்டு பஞ்சலிங்கம் அருவிக்கு மேல் 50 மீட்டர் தூரத்தில், திறந்த வெளியில் பீடம் அமைத்து அதில் 5 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த 5 லிங்கங்களில், 3 லிங்கங்களை வெள்ளம் அடித்து சென்று விட்டது. அத்துடன் அங்கு இருந்த நாக கன்னி சிலையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது.
நாகதோஷம் உள்ளவர்கள், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ள குன்றின் கிழக்கு புறத்தில் நாகதோஷ பரிகார கற்களை வைத்து செல்வது உண்டு. அப்படி அங்கு வைக்கப்பட்டிருந்த பரிகார கற்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன.
இப்போது வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 லிங்கங்களையும் தேடும் பணியில் கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் ஈடுபட்டு்ள்ளனர்.
நேற்று முன்தினம் காட்டாற்று வெள்ளம் கோவிலை சூழ்ந்ததால் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியவில்லை. பூஜைகளும் நடக்கவில்லை.
நேற்று கோவிலை சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, காலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய மூன்று கோவில்களும் சுத்தம் செய்யப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடந்தன.
கடந்த 1987ம் ஆண்டில் இதே போன்று வெள்ளத்தில் 5 லிங்கங்களில் 4 லிங்கங்கள் அடித்து செல்லப்பட்டன. அதன் பிறகு 2002ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது, புதியதாக இந்த 5 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications