இந்திய கடற்படை அதிகாரியை கொன்ற பிரிட்டிஷ் நபருக்கு 18 ஆண்டு சிறை
லண்டன்: கிளாஸ்கோ நகரில் கடந்த மார்ச் மாதம் இந்திய கடற்படை அதிகாரியை இனவெறியுடன் தாக்கிக் கொலை செய்த இங்கிலாந்து நபருக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் குணால் மொஹந்தி. 30 வயதான இவர் கடற்படை அதிகாரி ஆவார். கடந்த மார்ச் மாதம் இவர் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு விடுதிக்கு தனது நண்பர்களோடு போய்க் கொண்டிருந்தார்.
அப்போது கிறிஸ்டோபர் மில்லர் என்ற 25 வயது இளைஞர் மொஹந்தியை ஆவேசமாக கூச்சலிட்டபடி கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மொஹந்தி உயிரிழந்தார்.
இதையடுத்து மில்லர் கைது செய்யப்பட்டு கிளாஸ்கோ ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற தற்காலிக நீதிபதி ஜான் பெக்கெட், இந்தக் கொலை இனவெறியுடன் செய்தது நிரூபணமாகியுள்ளது.
இந்தக் கொலைக்காக மில்லர் வருந்தியதாகத் தெரியவில்லை. மாறாக சந்தோஷமடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக இந்தக் கொலை நடந்துள்ளது. இதற்கு நியாயம் கற்பிக்க முடியாது. ஒரு மனிதனின் நிறத்தை வைத்து இவ்வாறு செய்ய முயல்வது பாவச் செயலாகும். இதற்கு மன்னிப்பும் கிடையாது என்று கூறி 18 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்திய கடற்படையில் பணியாற்றி வந்தவர் மொஹந்தி. கேப்டன் பதவிக்கான தேர்வுக்காக கிளாஸ்கோ சென்றிருந்தபோது பரிதாபமாக கொலை செய்யப்பட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications