பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு: இனி நொடிக்கு ஒரு பைசா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அழைப்புக் கட்டணங்களை கணிசமாகக் குறைத்துள்ள மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம். இனி அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா மட்டுமே என்ற புதிய கட்டண விகிதத்தை பிரீபெய்டு சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி, பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் உள்ளூர், வெளியூர் பி.எஸ்.என்.எல். அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா செலவில் பேசலாம். மற்ற இணைப்புகளுக்கு 1.2 பைசா செலவில் பேசலாம்.
எஸ்டிவி-45 என்ற இந்த புதிய திட்டத்தை ரூ.45 செலுத்தி வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒரு வருட வேலிடிட்டியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டுமுதல் நிமிடத்துக்கு 10 பைசா என அழைப்புக் கட்டணத்தை மாற்றவிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ ராசா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
