கடலோர காவல்படைக்கு தூத்துக்குடியில் விமான தளம்
சென்னை: கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி ஏ.ராஜசேகர் இன்று முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பொதுத்துறைச் செயலாளர் தேவ ஜோதி ஜெகராஜன் உடனிருந்தார்.
அப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது குறித்து முதல்வர் வருத்தம் தெரிவித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது குறித்து முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார். இந்த தாக்குதல் தொடராமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடலோர காவல்படைக்கு விமானத் தளம் அமைக்க தூத்துக்குடியில் 50 ஏக்கர் இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இங்கு விரைவில் கடற்படை தளம் அமைக்கப்படும்.
அதே போல சென்னையில் கடலோரக் காவல் படைக்கு என தனி கப்பல் தளமும், உளுந்தூர்பேட்டையிலும் விமானத் தளமும் அமைக்கப்படும் என்றார்.
கடலோரக் காவல் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications