செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் சிறை!
Subscribe to Oneindia Tamil

மேலும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டால் 6 மாத காலம் டிரைவிங் லைசென்சும் ரத்து செய்யப்படவுள்ளது.
செல்போனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இது தவிர வாகனம் ஓட்டும்போது செல்போனில் மெசேஜ் அனுப்புவது, செல்போனில் மெசேஜை வாசிப்பது போன்றவையும் குற்றமாகவே கருதப்படும்.
வாகனம் ஓட்டிக் கொண்டு ஹேண்ட்ஸ் ப்ரீ செட் மூலம் பேசுவதும் தண்டனையாகவே கருதப்படவுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் இகு தொடர்பாக திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி போக்குவரத்து போலீசார் தற்போது வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications