ஆஸி. அகதிகள் கப்பல் நிற்பதில் ஆட்சேபனை இல்லை- இந்தோனேசியா
ஜகார்தா: 78 இலங்கைத் தமிழர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய கப்பல் இந்தோனேசியாவில் தொடர்ந்து நிற்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்கள் கடலில் தத்தளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை மீட்டு, ஓசியானிக் வைகிங் என்ற தங்களது ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்தக் கப்பல் இந்தோனேசியாவின் பின்டன் தீவுப் பகுதியில் நிற்கிறது. ஆனால் அதிலிருந்து இறங்க மறுத்து வருகின்றனர் இலங்கைத் தமிழர்கள். இது தொடர்பாக பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இவர்களை நாடு கடத்தப் போவதாக இந்தோனேசிய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தக் கப்பல் மேலும் சில நாட்கள் இங்கு நிற்க அனுமதிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெகு பைசாஸ்யா கூறுகையில், அகதிகள் கப்பல் மேலும் சில நாட்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் நிற்க வேண்டும் என ஆஸ்திரேலியா விரும்பினால் தாராளமாக நீட்டிப்பு விண்ணப்பம் அளிக்கலாம். நிற்பதற்கான அனுமதியை நீட்டிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
எங்களது ஒரே கோரிக்கை என்னவென்றால் இந்தப் பிரச்சினையை விரைவில் ஆஸ்திரேலியர்களும், இலங்கையர்களும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்றார்.
இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தத் தமிழர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு திட்டம் இருப்பதாக எங்களுக்குத் தகவல் இல்லை என்று பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அதேபோல இலங்கைத் தமிழர்களை ஏற்கும் எண்ணம் இல்லை என்று நியூசிலாந்தும் கூறி விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications