மாத இறுதியில் பொன்சேகா ராஜினாமா?-அரசியலில் குதிக்கிறார்!
கொழும்பு: அரசியல் குதிப்பதற்காகவும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகவும், தனது கூட்டுப் படைத் தலைவர் பதவியை இந்த மாத இறுதியில் சரத் பொன்சேகா ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் முரட்டுத்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்த ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் பொன்சேகா.
போருக்குப் பின்னர் அவரை ராஜபக்சே சகோதரர்கள் ஒதுக்கி ஓரம் கட்டி, கூட்டுப் படைத் தலைவர் என்ற உப்புச் சப்பில்லாத பதவியில் அமர்த்தி விட்டனர்.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ள பொன்சேகாவை எதிர்க்கட்சியினர் வலை விரித்து தங்களது பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளனர். அவரை அதிபர் தேர்தலி்ல பொது வேட்பாளராக நிறுத்த தீர்மானித்துள்ளனர். இந்த முயற்சிக்கு பொன்சேகாவும் உடன்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் சிங்கப்பூரில் வைத்து ரணில் விக்கிரமசிங்கேவுடன் ரகசியப் பேச்சும் நடத்தியுள்ளார் பொன்சேகா.
இதற்கிடையே, அரசியலில் குதிப்பதற்கு வசதியாக தான் வசித்து வரும் கூட்டுப் படைத் தலைவர் பதவியை இந்த மாத இறுதியில் ராஜினாமா செய்ய பொன்சேகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என் இஷ்டத்திற்கு முடிவெடுக்க உரிமை உண்டு - பொன்சேகா
தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்று பொன்சேகாவிடம் கேட்டபோது, எனது சுதந்திரத்திற்கு ஏற்ற வகையில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அரசியல் தலைவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவார்கள் என்றால், சமூக சேவையாற்றும் பொருட்டு எனது ராணுவச் சீருடையை கழற்றி வைப்பதற்கு தயாராக உள்ளேன்.
அரசியலில் ஈடுபட வேண்டாம் என யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அதேபோல, அரசியலில் ஈடுபடுமாறும் யாரும் என்னை நெருக்க முடியாது.
எனது விருப்பத்தின் அடிப்படையில் எந்தவொரு செயலையும் செய்யத் எனக்கு முழு உரிமையும் உண்டு என்று கூறியுள்ளார் பொன்சேகா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications