'விக்ரமாதித்தன் கதையும் ராகுல் காந்தியும்'!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது முடிவில்லாத 'விக்ரமாதித்தன் கதை' போல ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. இந்த கதைக்கு ஒரு புதிய திருப்பம் வந்திருக்கிறது. அதுதான் ராகுல் காந்தி என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் சிறப்பு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் சத்தியமூர்த்தி பவனில் தொடங்கப்பட்டது. அதில் இளங்கோவன் பேசுகையி்ல்,
தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்குப் பிறகு, 42 வருடமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது முடிவில்லாத விக்ரமாதித்தன் கதை போல ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. இந்த கதைக்கு ஒரு புதிய திருப்பம் வந்திருக்கிறது. அதுதான் ராகுல் காந்தி.
பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கு யாராவது புதிதாக வந்துவிட்டால் முகத்தை சுளிப்போம். அப்படி இருந்தும்கூட 15 லட்சம் புதிய இளைஞர்கள் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள். அவர்கள் ரூ.15 உறுப்பினர் கட்டணம் செலுத்தி வந்திருக்கிறார்கள்.
நமக்கு கட்டணம் ரூ.3 தான். அப்படியென்றால், ஜாம்பவான்களான நாம் அதைவிட 5 மடங்கு அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் இளைஞர்களுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கிச் செல்வது தான் சரி.
நாம் யாருக்காக புதிய உறுப்பினர்களை சேர்க்கிறோம், தனிப்பட்ட நமக்காக அல்ல. தமிழர்களை நல்வழிப்படுத்திட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான்.
தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள கட்சி காங்கிரசாக இருக்க வேண்டும். ஒரு சிலர் 3, 4 கட்சிகளின் அடையாள அட்டை வைத்திருப்பார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சி அட்டையை பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
அதுபோல் இல்லாமல், நம்மை நாமே ஏமாற்றும் வேலையைச் செய்யாமல் உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications