தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு குறைந்தது
சென்னை: தமிழகத்தில் மழைப் பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. உட்புறத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழை தற்போது கேரளாவில் தீவிரமாக உள்ளது. தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் ஓரளவு உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்துள்ளது. இருப்பினும் கன மழை இல்லை.
மழை நிலவரம்...
தமிழகத்தில் அதிக அளவாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பஞ்சப்பட்டி, புல்லம்பாடி ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பெய்துள்ளது. தொழுதூர், சங்கராபுரம், ஊத்தங்கரை, முசிறி ஆகிய இடங்களில் 5 செமீ, அரியலூர் 4, மேட்டூர் அணை, நடுவட்டம், செட்டிக்குளம், அருப்புக்கோட்டை தலா 3 செமீ, காஞ்சிபுரம், சேத்தியா தோப்பு, பாபநாசம், திருவையாறு, ஆலங்குடி, தூத்துக்குடி, சாத்தனூர் அணை, அரக்கோணம், கிருஷ்ணகிரி, தளி, ஆத்தூர், பவானிசாகர், பெருந்துறை, தேவலா, குழித்துறை, லால்குடி, பெரம்பலூர், மேலூர், காரைக்குடி தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
சென்னையில்...
சென்னை நகரில் இன்று காலை முதல் பெரிய அளவில் மழை இல்லை. வானம் மேக மூட்டமாக உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம். வான்ம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பில்லை.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான, சில இடங்களில் லேசான கன மழையும் இருக்க வாய்ப்புள்ளது.
நீலகிரி: பள்ளி-கல்லூரிகளுக்கு 1 வாரம் விடுமுறை:
இந் நிலையில் பலத்த மழை சேதத்தை சந்தித்துள்ள நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த வாரம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications