ரோடும் இல்லை...நடக்க பாதையும் இல்லை-வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் பெய்து வரும் பெருமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவாலும், பலர் உயிரிழந்துள்ளனர்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாத காரணத்தால், வழக்கம் போல இந்த ஆண்டும் மக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால், லேசாக மழை பெய்தாலே கழிவு நீர் வெளியே வந்துவிடுகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை நகரில் அனைத்து சாலைகளும் ஒரே நாள் மழையில் குண்டும், குழியுமாகி விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாவதுடன், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நடைபாதைகள் இல்லாததால், பாதுகாப்பாக நடப்பதற்கு வழியும் இல்லை.
அரசின் பல்வேறு துறையினர் அடிக்கடி சாலைகளை தோண்டுவதால், மரங்களின் வேர்களை வெட்டி விடுகிறார்கள். எனவே வேர் பிடிமானம் இல்லாமல், தூறல் விழுந்தாலே பல மரங்கள் அடியோடு சாய்கின்றன. அத்தகைய மரங்களை முன்பே கண்டறிந்து அகற்றி இருக்க வேண்டும். உடனடியாக விழக்கூடிய நிலையில் இருக்கின்ற மரங்களை கண்டுபிடித்து அகற்ற வேண்டும்.
மழை வெள்ளத்தால் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் உதவிப் பொருள்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications