மொபைல் ஃபோனி்ல் வானிலை அறிக்கை!
கோவை: விவசாயிகள் வானிலை அறிக்கையை மொபைல் ஃபோன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேளாண் தொழிலில் முக்கிமாக நெல், வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மா, கொய்யா, மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிர்களை தாக்கும் பூச்சிகளையும், பூஞ்சான நோய்களையும் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
இதற்குத் தேவையான மருந்து மற்றும் ஆலோசனைகளை வேளாண் உதவி இயக்குனர்கள் உரிய நேரத்தில் வழங்குவது இல்லை. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்று விவசாயிகள் குமுறுகின்னர்.
இந் நிலையில் மெபைல் ஃபோன் மூலம் வானிலை அறிக்கை மற்றும் ஆலோசனைகளைப் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனமான எக்கான் டெக்னாலஜி என்ற நிறுவனம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையுடன் இணைந்து தமிழக விவசாயிகளுக்கு மொபைல் ஃபோன் மூலம் அந்தந்த பகுதிகளுக்கான வானிலை அறிக்கை,
அடுத்த 4 நாட்களுக்கான வெப்ப நிலை, மழையளவு, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகிய தகவல்களை அறிவிக்க உள்ளது. இந்த திட்டம் சோதனை முறையாக தற்போது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் பொருளாதார சந்தைகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, உண்மையான சராசரி சந்தை விலை நிலவரங்கள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இத்தகவல்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலை இணையத் தளத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வெளியிடப்படுகிறது.
இந்த தகவல்களை மொபைல் ஃபோன் மூலம் பெற பல்கலைக்கழகத்தில் உள்ள விற்பனை மற்றும் சந்தை விலை நிலவர ஆராய்ச்சி பிரிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு விசாயிகள் செய்து கொண்டால், இந்த தகவல்கள் மொபைல் ஃபோன் தினசரி மூலம் கிடைக்கும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications