இலங்கையில் மியான்மர் சர்வாதிகாரி-ராஜ வரவேற்பு
கண்டி: மியான்மரில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு ராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் சர்வாதிகாரி ஜெனரல் தான் ஷ்வே இலங்கை வந்துள்ளார். அவருக்கு அங்கு 21 துப்பாக்கிகள் முழங்க ராஜ வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார் தான் ஷ்வே. நேற்று கொழும்பு வந்த அவருக்கு அதிபர் ராஜபக்சே வரவேற்பு அளித்தார்.
பின்னர் தான் ஷ்வேவுக்கு கண்டியில், சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா வரவேற்றார். பின்னர் தான் ஷ்வே கூறுகையில், இங்கு எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் வியப்பாகவும், திரில்லாகவும் உள்ளது.
இரு நாடுகம் மிக நெருங்கிய புத்தமத உறவுகளுடைய வரலாற்றைக் கொண்டவையாகும்.
எனது இலங்கை பயணத்தின்போது புத்தமத புனிதத் தலங்களுக்குச் செல்ல முன்னுரிமை கொடுக்கப் போகிறேன் என்றார்.
தான் ஷ்வே இலங்கை வருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் 26 பேர் கொண்ட குழு ஒன்றும் உடன் வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இக்குழு மியான்மர் திரும்புகிறது.
கண்டியில் உள்ள டீலக்ஸ் ஹோட்டலில் மிக பலத்த பாதுகாப்பு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளார் தான் ஷ்வே. அவருடன் பொகல்லகாமா பேச்சு நடத்தினார்.
மியான்மரும், இலங்கையும், புத்தமதத்தின் ஒரு பிரிவான தெரவாடா புத்தமதத்தை பின்பற்றும் நாடுகள் ஆகும்.
இதற்கிடையே, மியான்மருடன் இலங்கை நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்வது இலங்கையை சர்வதேச சமூகத்திடமிருந்து மேலும் விலகச் செய்து விடும் என இலங்கையில் வாழும் மியான்மர் புத்த பிக்குகள் இலங்கை அரசை எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் ஷ்வேவுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ள விரும்பும் ராஜபக்சே ஒரு முட்டாள் என்று காட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மியான்மர் சர்வாதிகாரியை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மியான்மர் புத்த பிக்குளின் செய்தித் தொடர்பாளரான நியானசிறி என்பவர் கூறுகையில், நாங்கள் தான் ஷ்வேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் இலங்கை அரசு எங்களை படையினரை வைத்து ஒடுக்கி விடும் என்றார்.
தான் ஷ்வே இரண்டு நாட்களுக்கு கண்டியில் தங்கியிருப்பாராம். பின்னர் அனுராதபுராவுக்கும், வேறு சில புத்த மத தலங்களுக்கும் செல்லவுள்ளாராம்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள புத்த விகாரைக்குச் செல்லும் அவர் அங்கு புத்த பிக்குகளிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அன்றே நாடு திரும்புகிறார்.
கடந்த ஜூன் மாதம் ராஜபக்சே மியான்மருக்கு விசிட் அடித்தார். இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிகள் செய்ததற்காக அப்போது தான் ஷ்வேவுக்கு நன்றி கூறி விட்டு வந்தார்.
தமிழர்களுக்கு எதிரான போரின்போது மியான்மரும் தன்னால் 'முடிந்த பல உதவிகளை' இலங்கைக்கு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்- தெ.ஆ. அமைச்சர்:
இதற்கிடையே, கொழும்பு வந்த தென் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மைதே நகோனா மாஷாபெனே, இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள புலிகள் ஆதரவாளர்க், இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் கெட்ட பெயரை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
இலங்கை குறித்து தவறான பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபரிடமும், தென் ஆப்பிரிக்க தமிழர்களிடமும் விளக்கிக் கூறுவேன். அவர்களது மனதை மாற்ற முயற்சிப்பேன்.
இலங்கைக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய தென் ஆப்பிரிக்கா தயாராக உள்ளது என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications