ஜெயலலிதா குரலில் சீமானிடம் பேசிய பலகுரல் நடிகர் கைது
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவதைப் போல நடிகர்- இயக்குநர்- நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானிடம் பேசிய பல குரல் மேடை நடிகரை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் மிரட்டும் தொணியில் பேசவில்லை, விளையாட்டாக பேசியதாக அவர் கூறியதால் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள பல முக்கிய நபர்களுக்கு அடிக்கடி ஜெயலலிதா குரலில் ஒரு மர்ம நபர் தொலைபேசி மூலம் பேசி வந்தார். இதுகுறித்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிலையில் இயக்குநர் சீமானுக்கும் இதுபோன்ற தொலைபேசி வந்தது.
இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனுக்குப் புகார்கள் போயின. உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த விஷமியைப் பிடிக்கும்படி ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி நடந்த வேட்டையில், தற்போது அந்த நபர் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், வெள்ளிங்கிரி (29) என்பவரை பிடித்து விசாரித்தோம். அவர் பலகுரலில் பேசும் நடிகர் ஆவார். கிராமப்புறங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பல தலைவர்களின் குரல்களில் இவர் பேசியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் போலீஸ் சரகத்தில் உள்ள வடக்கலூர் இவரது சொந்த ஊராகும். இவரை பிடித்து விசாரித்தபோது, நான் விளையாட்டாக முன்னாள் முதல்வரின் குரலில் பேசிவிட்டேன் என்றும், அதில் உள்நோக்கமோ, மிரட்டலோ, பணம் சம்பாதிக்கும் குறிக்கோளோ இல்லை என்றும் கூறினார்.
விசாரணையிலும் அது உண்மை என்று தெரிய வந்தது. இதனால் அவரை எச்சரிக்கை செய்து விடுவித்து விட்டோம் என்றார் ராஜேந்திரன்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications