எதியூரப்பா பெட்ரூமுக்கு அரசு ரூ. 44 லட்சம் செலவு

ஆனால், அவர் விட்டது முதலைக் கண்ணீர் என்பது அவரது இன்னொரு செயலின்மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
தனது வீட்டை சீரமைப்பதற்காக ரூ. 1.7 கோடி அரசுப் பணத்தை செலவிட்டுள்ளார் ஏழை-எளிய மக்களுக்காக கண்ணீர் சிந்திய எதியூரப்பா. அதிலும் இவரது பெட்ரூமை சீர்படுத்த மட்டும் அரசுக்கு ஆகியுள்ள செலவு ரூ. 35 லட்சம்.
இதன் அருகே உள்ள இன்னொரு பெட்ரூமை மேம்படுத்த ஆகியிருக்கும் செலவு ரூ. 14.65 லட்சம்.
தகவல் அறியும் சட்டத்தின்மூலம் இந்தத் தகவல்கள் வெளியே வந்துள்ளன. டாய்லெட், இன்டீரியர், மார்பிள் தரை, பால்ஸ் சீலிங், சுவர் ஓவியங்கள் என முதல்வரின் வீட்டுக்கு ரூ. 1.7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு பாஜக ஆட்சி்க்கு வந்த பின்னர் முதல்வர், அமைச்சர்களின் வீடுகளை புதுப்பிக்க மட்டும் இதுவரை ரூ. 10 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எதியூரப்பாவக்கு அடுத்தபடியாக அரசுப் பணத்தை தனது வீட்டை புதுப்பிக்க அதிக அளவில் செலவிட்டுள்ளவர் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான அமைச்சர் கருணாகர ரெட்டி.
இவ்வாறு எதியூரப்பா-ரெட்டிகளின் வீட்டுப் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களது நாட்டுப் பிரச்சனையும் ஓயவில்லை. ரெட்டிகள் சொன்னபடி அமைச்சர் ஷோபாவை வீட்டுக்கு அனுப்பிவிட்ட எதியூரப்பா, ரெட்டிகள் சொன்னபடி அதிகாரிகளையும் நியமித்துவிட்டார்.
அடுத்தபடியாக ரெட்டிகளின் மூன்றாவது நிபந்தனைப்படி சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டாரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஆனால், இதில் எதியூரப்பாவுக்கு ஒரு துணை நிபந்தனையை ஷெட்டார் போட்டுவிட்டார். தனக்கு கொஞ்சமும் ஆகாத அமைச்சர் பசவராஜ் பொம்மையை பதவி நீக்கினால் தான் அமைச்சராவேன் என்பது தான் அந்த நிபந்தனை.
பொம்மை எதியூரப்பாவின் மாபெரும் ஜால்ரா ஆவார். அவரை தூக்க வேண்டும் என ஷெட்டார் நெருக்கடி தருவதால் எதியூரப்பா கலங்கிப் போயுள்ளார்.
பொம்மையும் இருக்கடும் நீ்ங்களும் அமைச்சராகுங்கள் என்று ஷெட்டரை நேற்று முன் தினம் அவரது வீட்டிலேயே சந்தித்து கெஞ்சினார் எதியூரப்பா. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
கேபினட் கூட்டத்தில் எதியூரப்பா-ரெட்டி வாக்குவாதம்:
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கும், சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிகும் இடையே கடும் வாக்குவாதமும் நடந்துள்ளது.
இதையடுத்து அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே எழுந்து சென்று எதியூரப்பாவை கேவலப்படுத்தினார் ஜனார்த்தன ரெட்டி.
குழு சொல்வது போல் முதல்வர் செயல்பட வேண்டும்:
இதற்கிடையே மத்திய தலைமை சொன்னது போல ஒருங்கிணைப்பு குழு சொல்லும் முறையில் தான் முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட வேண்டும் என்று ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஆட்சியை சீராக நடத்திச் செல்லும் நோக்கத்தோடே, ஒருங்கிணப்புக்குழு அமைக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது. இந்தக் குழுவின் தலைவராக பாஜக மேலிடத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இருப்பார் என்றார்.
ரெட்டிகளை கண்டித்து ஆந்திராவில் போராட்டம்:
இந் நிலையில் ஜனார்த்தன ரெட்டி, கருணா கரரெட்டி ஆகியோர் கர்நாடக-ஆந்திர எல்லையில் சுரங்கங்கள் அமைத்து கிரானைட் கற்களை தோண்டி எடுத்து வருவதில் பல்வேறு முறைகேடுகள் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து ரெட்டி சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் 42 பேர் நேற்று ஹைதராபாத்தில் தலைமைச் செயலகம் முன் திடீர் போராட்டம் நடத்தினர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications