பிஷப்புக்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்
சென்னை: பதவியிலிருந்து ஓய்வு பெற்றும் அதிலிருந்து விலக மறுத்து, பிடிவாதமாக தொடர்ந்து வரும் பிஷப்பை கண்டித்து சென்னையில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சி.எஸ்.ஐ. பேராயராக தேவசகாயம் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தார். அவரது பதவி காலம் 1.5.09 அன்றுடன் முடிந்தது. ஆனாலும் அவர் பதவியில் தொடருவேன் என்று கூறி உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் என்று வழக்கு தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பிஷப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி கிறிஸ்தவ ஆயர்கள், சபை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை பேராய அலுவலகம் முன்பு போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்ட குழு தலைவர் மங்கள்ராஜ், தலைமையில் ஆயர்கள் கிதியோன் தைரியம், ஜான்விக்டர், சவுந்தரராஜன், மனோ சந்தோசம், கிறிஸ்டோபர் கிரிதரன், டேனியல், செல்லத்துரை, பால் வில்லியம், சிகாமணி, தினகரன், பால் நவராஜ் உள்பட 42 ஆயர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மங்கள்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை மதிக்காமல் காபந்து பிஷப்பாக உள்ள தேவசகாயம் தொடர்ந்து தன்னை பிஷப்பாக பிரகடனம் செய்து தொடர்ந்து வருகிறார். அவரது பதவி காலம் முடிந்த பிறகும் கூட பிஷப்பாக இருப்பேன் என்று திருச்சபை சட்டத்துக்கு விரோதமாக நீதிமன்றம் சென்றுள்ளார்.
ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக அவர் கூறிய கருத்து கிறிஸ்தவ மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் உடனடியாக இந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் விலகும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications