கருணாநிதி போல் பேசமாட்டேன்- இளங்கோவன்
தூத்துக்குடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் என்னைப் பற்றி கருணாநிதி கூறிய கருத்திற்கு, நானும் அவர் போன்று தரம் தாழ்ந்து பதில் கூற விரும்பவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
வாகைகுளம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நெல்லை, ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளுடன் கக்கன்,காமராஜர் சிலைகளையும் நிறுவி, காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக முதல்வர் கருணாநிதி வயது, அனுபவத்தில் மூத்தவர். எனவே, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், 'சிலரின் உளறல்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது' என என்னைப் பற்றி அவர் கூறிய கருத்திற்கு, நானும் அவர் போன்று தரம் தாழ்ந்து பதில் கூற விரும்பவில்லை.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திய போது அதற்கு திமுக தரப்பில் டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார். அதுபோல தமிழகத்தில் சில பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம்.
கருத்து வேறுபாடுகள் காரணமாக, எதிர்காலத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்று இப்போதே கூற நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல. ஆனால், தற்போது தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் உறவு நன்றாக உள்ளது என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications