மதுரையில் பிசினஸ் ஹோட்டல்-இண்டஸ் திட்டம்
சென்னை: பிரபல கட்டுமானத் துறை நிறுவனமான 'இண்டஸ்', மதுரையில் பிரமாண்டமான ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது.
கோயில் நகரமான மதுரையின் மீது ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறையினரின் கவனம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசும் தொழில்துறை சார்ந்த புதிய திட்டங்களை இப்பகுதியில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல இண்டஸ் டெவலப்பர்ஸ், மதுரையில் சுமார் ஏழரை ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இங்கு 125 முதல் 150 அறைகள் கொண்ட நவீன பிசினஸ் ஹோட்டல் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள இண்டஸ் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இண்டஸ் இயக்குனர் அபிஷேக் லுனாவத் மேலும் கூறுகையில், 'ஹோட்டல் மட்டுமன்றி மதுரையி்ல் 550 யூனிட் கொண்ட குடியிருப்புகளை கட்டவும் திட்டமிட்டுள்ளோம். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் 850 முதல் 1200 சதுரடி வரையிலான அளவுகளில் கட்டப்படும்' என்றவர் விலையை குறிப்பிடவில்லை.
சென்னை சைதாப்பேட்டையிலும் தற்போது இண்டஸ் ஹவுசிங் பிராஜக்ட் நடப்பதாக லுனாவத் தெரிவித்தார். 1000 முதல் 1500 சதுரடி அளவிலான குடியிருப்புகளின் விலை, சதுரடிக்கு ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications