மராட்டியர்களுக்கே வேலை-ஸ்டேட் வங்கிக்கு ராஜ் எச்சரிக்கை
மும்பை: பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலியிடங்களுக்கான நாளை தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், வேற்று மாநிலத்தவரை மும்பையில் பணியமர்த்தக் கூடாது என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், வங்கி வட்டாரம் மற்றும் தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில், சுமார் 20,000 கிளார்க் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும், 2,980 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள இப்பணியிடங்களுக்கு அதே மாநிலத்தவரைத் தவிர வேறு நபர்களை நியமிக்கக் கூடாது என வலியுறுத்தி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனா கட்சியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் 1500 இடங்களுக்கு தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வு நடைபெற உள்ள நிலையில், வங்கிக்கு ராஜ் தாக்கரே சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா பாரத ஸ்டேட் வங்கிக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், வேற்று மாநிலத்தவரை மும்பை வங்கியில் பணியமர்த்தக் கூடாது என அதில் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications