நிலவில் நிறையவே தண்ணீர் உள்ளது- நாசா ஆய்வு
நியுயார்க்: சந்திரனில் எதிர்பார்த்ததை விட அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்கிராஸ் என்ற ராக்கெட்டை நாசா நிலவுக்கு அனுப்பியது.
இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்ட ஒரு கருவியை, சந்திரனில் சூரிய ஒளியே படாத பரப்பின் மீது விஞ்ஞானிகள் மோதச் செய்தனர். மோதலின் விளைவை, ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட படங்களை வைத்து நாசா வி்ஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடிவு குறித்து நாசா விஞ்ஞானி ஜான் லோக்ஸ்டோன் கூறுகையில், 'மிகக் குறைந்த அளவிலேயே நிலவில் தண்ணீர் இருப்பதாக இதுவரை நம்பியிருந்தோம். ஆனால் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் உள்ளன.
ராக்கெட் மோதிய இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குறைந்தது 25 கேலன் தண்ணீர் இருக்கக் கூடும். சந்திரன் வறட்சியான பாலைவனப் பகுதி என்ற கருத்து இதன்மூலம் சிதைக்கப்பட்டு விட்டது என்றார்.
சந்திரனில் தண்ணீர் இருப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, சந்திரன் தொடர்பான பல்வேறு புதிய ஆய்வுத்தளங்களுக்கு அடிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications