ஒரு சவரன் விலை ரூ. 13,000ஐ நெருங்கும் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக படு வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் சவரன் ரூ.12712 ஆக உயர்ந்துள்ளது.
விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.13000 ஐத் தொட்டுவிடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.1,578-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்து 624-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு காணப்பட்டது.
நேற்று 1 கிராம் தங்கத்தின் விலையில் ரூ.11 அதிகரித்து ரூ.1,589-க்கும், 1 பவுன் தங்கத்தின் விலையில் ரூ.88 அதிகரித்து ரூ.12 ஆயிரத்து 712-க்கும் விற்பனை செய்யப்பட்டது












Click it and Unblock the Notifications