மணிமுத்தாறு அணை நாளை திறப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில மீண்டும் பலத்த மழை தொடங்கியிருப்பதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அணை நாளை திறக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. காற்றழுதத தாழ்வு மண்டலத்தின் காரணமாகவும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை முதல் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணையில் நேற்று 118 அடி நீர் மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1563 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மணிமுத்தாறு அணையில் 96.60 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறில் 136.66 அடி நீர்மட்டம் உள்ளது.
மணிமுத்தாறு அணை நாளை திறப்பு
பாசன சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை நாளை திறக்கப்படுகிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டிய போது பிரதான கால்வாய் பாசனத்திற்காக அணை திறக்கப்படுவது வழக்கம். பிரதான கால்வாய் நீரொழுக்கு விதிமுறைகளின்படி இக்கால்வாய்களில் நான்கு ரீச்சுகளுக்கும், ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன்படி நடப்பாண்டில் நாங்குநேரி, சாத்தான்குளம், திருசசெந்தூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பகுதிகளை சேர்ந்த விளைநிலங்கள் பயனடையும் வகையில் 3வது மற்றும் 4வது ரீச் குளங்களுக்கு முன்னுரிமை அளித்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுவுள்ளதாக பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி அணையில் 96.60 அடி தண்ணீர் பெருகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications