மின் உற்பத்தியில் பின்னடைவு ஏன்- வீராசாமி விளக்கம்
புதுடெல்லி: தமிழகத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட இலக்கை அடைய போதிய உபகரணங்களும், திறமையான பணியாளர்களும் இல்லை என்று டெல்லி மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
மாநில மின்சாரத்துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நடப்பு 11வது ஐந்தாண்டு (2007-12) திட்டத்தில் தமிழ்நாட்டில் 5055 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. அதில் 147 மெகாவாட் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 4098 மெகாவாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற போதிய கருவிகள் இல்லை. திறன் படைத்த நபர்கள் இல்லை. இதனால் தாமதம் ஏற்படுகிறது. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யவேண்டும்.
2000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையம், 500 மெகாவாட் கொண்ட நெய்வேலி அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் ஆகியவை அடுத்த மாதம் ஜூனுக்குள் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் உற்பத்தியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 3400 மெகாவாட் திறன் கொண்ட 3 அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவற்றுக்கு நீண்ட காலம் நிலக்கரி வழங்க இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதை விரைந்து முடிக்க வேண்டும்.
மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் திரவ எரி பொருளுக்கு கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் யூனிட்டுக்கு 50ல் இருந்து 60 காசு உற்பத்தி செலவு குறையும். தமிழ்நாட்டு அனல் மின் நிலையங்களுக்கு 1 கோடியே 40 லட்சம் டன் நிலக்கரி ஒதுக்கப்படுகிறது. இவை கப்பல் வழியாக கொண்டு வரப்படுகிறது. இதற்கு அதிக அளவில் சேவை வரி விதிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications