யுஎஸ்-ஏர் இந்தியா மேனேஜர் மீது செக்ஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: நியூயார்க் நகரின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்திய அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் அனில் சபர்வால் என்ற அதிகாரி, அங்கு ஊழியராக இருக்கும் மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த பெண் ஊழியரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர் போலீஸில் அப்பெண் ஊழியர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக அனில் இந்தியாவுக்குத் தப்பி வந்து விட்டார்.
இருப்பினும் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அமெரிக்க போலீஸார் விரைவில் அனிலைக் கைது செய்யக் கூடும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து அமெரிக்காவுக்கான ஏர் இந்தியா செயல் இயக்குநர் சித்ரா சர்காரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications