கேரள வாகனங்களை மறிப்போம்: மதிமுக
மதுரை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்த வரும் டிசம்பர் 29ம் தேதி கம்பத்தில் மதிமுக மறியல் போராட்டம் நடத்த உள்ளது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிடக்கோரி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: பக்கத்திலேயே புதிய அணை கட்டுவதன் மூலம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மறைமுகமாக திட்டமிட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை மதிக்காமல் கேரள முதல்வர், அமைச்சர்கள் புதிய அணை, புதிய ஒப்பந்தம் என பேசி வருகின்றனர்.
புதிய அணை கட்டி இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். கேரள அரசின் அக்கிரமத்தை தடுத்து நிறுத்தும் வகையில் டிசம்பர் 29ம் தேதி, தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை மறிப்போம்.
மத்திய அரசு அனுமதி மறுத்தாலும், கேரள அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது.
தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் அங்கு புதிய அணையை கட்ட விடமாட்டோம். இதை அனுமதித்தால் சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்தது போன்ற நிலை இந்தியாவிற்கும் ஏற்படும். இது எங்கள் காலத்தில் நடக்காவிட்டாலும், எங்கள் பிள்ளைகள் காலத்தில் நடக்கும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications