திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் - குப்தா ஆலோசனை
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் தொடப்பாக தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
திருச்செந்தூர் தொகுதி அதிமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவுக்குத் தாவி விட்டார். வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதையடுத்து இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தொகுதிகளுக்கும் சேர்த்து ஜனவரி மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக இன்று தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் சென்னையில் இருந்தபடி தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று ஆலோசனை நடத்தினார்.
வரும் 20ம் தேதிக்குள் இரு தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளிடயிட வேண்டும் என அப்போது கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஓட்டுப் பதிவை வீடியோவில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம், அவசியம் எனவும் வலியுறுத்தினார். மேலும் தேர்தல் அலுவலர்களாக மத்திய அரசு ஊழியர்களை நியமிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
விரைவில் இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications