காதல் தகராறு- மருத்துவ மாணவரை கடத்திக் கொல்ல முயற்சி
நெல்லை: காதல் தகராறில் மருத்துவக் கல்லூரி மாணவரைக் கடத்திக் கொல்ல முயன்றது ஒரு கும்பல். அதிலிருந்து தப்பி அவர் உயிர் பிழைத்துள்ளார்.
பாளை மருத்துவ கல்லூரி மாணவர் கந்தசாமி பிரபு என்பவர் காதல் பிரச்சனையால் கடத்தப்பட்டதாகவும் அவரை மீட்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரை சித்ரவதை செய்து கொலை செய்ய முயன்றபோது அதிலிருந்து தப்பியோடி வந்துள்ள தகவல் கிடைத்துள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் நகை தொழிலாளி. இவரது மகன் கந்தசாமிபிரபு. இவர் பாளை தென்றல் நகரில் தங்கியிருந்து நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டி படித்து வந்தார்.
அப்போது அவருடன் படிக்கும் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவிக்கும், கந்தசாமி பிரபுக்கும் காதல் மலர்ந்தது. இதற்கு மாணவியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த வாரம் கந்தசாமிபிரபு கல்லூரிக்கு வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை.
இதனால் அவரது தந்தை ராமகிருஷ்ணன் பாளை வந்து மகனின் நண்பர்கள் மற்றும் அவரது காதலியிடம் விசாரித்தார். அப்போது கந்தசாமி பிரபு பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் அவர் பாளை போலீசில் தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்தார்.
இதனால் போலீசார் கந்தசாமி பிரபுவை காதல் பிரச்சனையால் யாரும் கடத்தி சென்றார்களா, என்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கந்தசாமி பிரபுவை காதல் பிரச்சனையால் சிலர் கடத்தி சென்றதாக திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் மாணவனை மீட்கும் முயற்யில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த கடத்தல் கும்பல் நேற்றிரவு மாணவன் கந்தசாமி பிரபுவை மார்த்தாண்டம் அருகே காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டது.
படுகாயத்துடன் உயிருக்க போராடிய கந்தசாமி பிரபு அங்கிருந்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று கந்தசாமி பிரபுவை மீட்டு பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications