போதனை: மாணவிகளின் தந்தையை கொன்ற ஆசிரியர்கள்
ஹைதராபாத்: சரியாக பாடம் நடத்தவில்லை என்று கூறிக் கண்டித்த மாணவிகளின் தந்தையை பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு பாஷா (50). இவருக்கு இரு மகள்கள். இருவரும், அரசுப் பள்ளியில், முறையே 4 மற்றும் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இருவருக்கும் பாடம் ஏறவில்லை. இதனால் ஆசிரியர்கள் மீது அதிருப்தி அடைந்தார் பாஷா. பள்ளிக்குச் சென்ற அவர், ஒழுங்காக பாடம் சொல்லிக்கொடுங்கள் என்று ஆசிரியர்களை கண்டித்து திட்டினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஷா திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி, போலீஸாரிடம், ஒரு புகார் கொடுத்தார்.
அதில், சரியாக பாடம் கற்றுக் கொடுங்கள் என்று கூறிய எனது கணவரை, பள்ளி ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். பின்னர் இரவு முழுவதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.
இதில் அவர் உடல் நலம் குன்றி சுய நினைவு இழந்தார். உடனே அவரை மெகபூப் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறுகையில், குடிபோதையில் சென்று ஆசிரியர்களிடம் தகராறு செய்து இருக்கிறார். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து அவரை பள்ளிக்கு வெளியே அனுப்பி வைத்தனர்.
பாஷா உடலில் உட்காயங்களோ, வெளிக்காயங்களோ இல்லை. அவர் போதைக்கு அடிமையானவர். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் அவர் இறந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications