விதிமீறல்-5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு!

இக்கல்லூரிகளின் விதிமூறல்களுக்கு பக்கபலமாக இருந்த ஏஐசிடிஇ அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கோயம்பேடு, சென்னையை அடுத்துள்ள அடையாளம்பட்டு மற்றும் இருங்காட்டுக்கோட்டை, நாகர்கோயில், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏஐசிடிஇ வகுத்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன என்றும், ஏஐசிடிஇ அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் குற்றச் சதியில் ஈடுபட்டு ஏஐசிடிஇன் அனுமதி மற்றும் அங்கீகார நீட்டிப்பைப் பெற்றுள்ளன என்றும் கல்லூரிகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கல்லூரிகளை நடத்துவதற்கான வைப்புத் தொகை, குறிப்பிட்ட அளவு நிலங்கள் ஆகியவற்றை போலியான மற்றும் மோசடி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டியுள்ளன. தவிர, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் கல்லூரிகளில் இல்லை.
கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி சோதனையின்போது, கல்லூரிகளில் கட்டடம், நூலகம், ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், ஏஐசிடிஇ விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மீறி இந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications