சச்சினை ஆதரித்து பேசிய நடிகர் வீடு மீது தாக்குதல்
மும்பை: மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என்று கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கரை கண்டித்த பால் தாக்கரேவுக்கு எதிராக கருத்து சொன்ன நடிகரின் வீடு மீது சிவசேனா தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தியர் அனைவருக்கும் மும்பை சொந்தம் என்று கூறியதற்கு சச்சின் தெண்டுல்கருக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு இந்தி-போஜ்புரி மொழி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் மும்பை மகதாவில் உள்ள மனோஜ் திவாரி வீடு மீது தாக்குதல் நடத்தினர்.
நேற்று இரவு 9 மணியளவில் 20க்கும் மேற்பட்ட கும்பல் அவரது வீடு மீது சரமாரி கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வீடு பெரும் சேதமடைந்தது.
மனோஜ் திவாரி உடனே மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்தக் கும்பல் ஆவேச கோஷமிட்டது.
தாக்குதல் நடந்த போது மனோஜ்திவாரி வீட்டில் இல்லை. இது தொடர்பாக அவருடைய உதவியாளர் சசிகாந்த் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். வழக்கம்போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பால் தாக்கரே வசம் இருந்த மராட்டிய ஓட்டுக்களை ராஜ் தாக்கரே தனது அடாவடி அரசியல்மூலம் அபகரிக்க ஆரம்பித்துவிட்டதால் பால் தாக்கரேவுக்கு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர அரசியல்ரீதியில் பிழைப்பு நடத்த வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications