ராப் டான்ஸில் கலக்கிய விளாடிமீர் புடின்!

மாஸ்கோவில் நடந்த இசை சானல் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட புடின் திடீரென ராப் டான்ஸும், பிரேக் டான்ஸும் ஆடி கூட்டத்தினரை குஷிப்படுத்தினார்.
புடின் திடீரென இப்படி ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப மோசம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது புடினின் ஆட்டம்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த இளைஞர்கள், புடினின் ஆட்டத்தைப் பார்த்து ஆரவாரித்தனர்.
57 வயதான புடின் ஸ்போர்ட்ஸ் உடையில் வந்திருந்தார். புடின் மேடையில் ஆடியபோது அவருக்குப் பாதுகாப்பாக வந்த பாதுகாப்புப் படையினர் கூட்டத்திதனர் மத்தியில் கலந்து கண்காணிப்பை மேற்கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய புடின், மது, போதை இரண்டையும் இளைஞர்கள் தொடக் கூடாது. அது அவர்களை மட்டுமல்லாமல் கலாச்சாரத்தையும் கெடுத்து விடும் என்று அட்வைஸ் கொடுத்தார்.
புடினின் இந்த செயலுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது. தனது செல்வாக்கைக் கூட்டிக் கொள்வதற்காக இவ்வாறு டான்ஸ் ஆடுகிறார் புடின் என்று கோமர்சன்ட் என்ற ரஷ்ய நாளிதழ் வர்ணித்துள்ளது.
புடினின் செல்வாக்கு தற்போதும் 66 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2012ம் ஆண்டு மீண்டும் அதிபர் பதவிக்கு புடின் போட்டியிடக் கூடும் என பெரும்பாலான ரஷ்யர்கள் நம்புகின்றனர்.
முன்னாள் கேஜிபி உளவாளியான புடினுக்கு விமானம் ஓட்டுவது, பனிச் சறுக்கு, நீர்மூழ்கிகளில் வசிப்பது, துப்பாககி சுடுதல், கராத்தே இவையெல்லாம் மிகவும் பிடித்தமானவை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications