மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு புற்று நோய்

பால் ஆலனுக்கு லிம்போமா என்ற வகை புற்று நோய் தாக்கியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் தொடர்பான ஹாட்கின்ஸ் நோய் அவரைத் தாக்கியது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் ஆலன். தற்போது லிம்போமா புற்றுநோய் அவரைத் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
56 வயதாகும் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது அவரது உல்கான் நிறுவன இணையதளத்தில், இந்த மாதத் தொடக்கத்தில் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது கீமோதெரபி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்கான் நிறுவன தலைமை செயலதிகாரியும், சகோதரியுமான ஜோடி ஆலன் கூறுகையில், லிம்போமாவின் பொது வகையான பி செல் லிம்போமா ஆலனை தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது பால் ஆலன் குடும்பத்திற்கு கஷ்டமான செய்தியாக வந்துள்ளது. இருப்பினும் பால் முன்பு ஹாட்கின்ஸ் நோயை வென்றவர். எனவே இதையும் அவர் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
பால் ஆலன் தற்போது நன்றாக உள்ளார். தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றார்.
70களில் பில் கேட்ஸுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர் பால் ஆலன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுனராக 1983ம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அந்த ஆண்டில்தான் அவருக்கு ஹாட்கின்ஸ் நோய் தாக்கியது.
கடந்த செப்டம்பர் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 400 அமெரிக்க பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்தைப் பிடித்தார் பாலன் ஆலன். அவரது சொத்து மதிப்பு 11.5 பில்லியன் டாலர்களாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications