உப்பங்களில் மழைநீர் தேக்கம்- உப்பு உற்பத்தி பாதிப்பு
கன்னியாகுமரி: கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பால்குளம், கோவாளம், சாமித்தோப்பு, புத்தளம், மணவாளங்குறிச்சி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு மலை போல் குவித்து வைக்கப்பட்டு தென்னை ஓலை மூலம் நேர்த்தியாக வேயப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
பின்னர் தேவைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் பெரும்பாலான குளங்கள், ஆறுகள் நிரம்பி வருகின்றன.
தொடர் மழையால் உப்பளங்களில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. உப்பளங்களில் தேங்கிய நீர் குறையாததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிய இன்னும் பலநாட்கள் ஆகும் என்பதால் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications